திருவாரூர், ஜன.11- வறட்சி எதிரொலியாக திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முக்குளம் தர்காஸ் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ். தனக்கு சோந்தமான நிலத்தில் ஆழ்குழா கிணறு மூலமாக சம்பாசாகுபடி மேற்கொண்டிருந்தார். ஆனால் கடும் வறட்சி காரணமாக ஆழ்குழா கிணறில் தண்ணீர் வரவில்லை, இதனால் சம்பா சாகுபடியை சரிவர மேற்கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் விவசாயி துரைராஜ் மேற்கொண்ட சம்பா பயிர் அறுவடையில் 45மூட்டை கிடைப்பதற்கு பதிலாக 6 மூட்டை மட்டுமே கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு துரைராஜ் மரணம் அடைந்தார். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வறட்சியால் தற்கொலை செது கொண்ட விவசாயி தங்கவேல் உடலை விவசாயிகள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்