img
img

சபாநாயகர் இருந்தாதானே தீர்மானம் கொண்டு வருவீங்க...
புதன் 29 மே 2019 16:09:29

img

அதிமுக தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தினம்தினம் புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. சபாநாயகர் மீது கடந்த 1ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த மனுவை சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்தார். இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது இன்னும் சட்டமன்றம் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. சட்டமன்றம் கூடியவுடன் எங்களது நடவடிக்கைகளை பார்ப்பீர்கள், Wait and See எனக்கூறினார். 

இந்நிலையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அதிமுக ஒரு அதிரடி திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது சபாநாயகராக இருக்கும் தனபாலை ராஜினாமா செய்யவைத்து அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டுவருவதுதான் அவர்களின் ப்ளான். அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டுவருவதன்மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடியாகிவிடும். இதன்மூலம் இன்னும் ஒரு ஆறு, ஏழு மாதத்திற்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் ஆட்சி நடத்தலாம். 

தனிப்பெரும்பான்மை இருந்தும் ஏன் இந்த முடிவு என்ற கேள்விக்கும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர். 97 ஆக இருந்த திமுக கூட்டணியின் பலம்  இடைத்தேர்தலுக்கு பிறகு 110 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக கூட்டணியின் பலம் 123 ஆக குறைந்துவிட்டது. இருந்தாலும் இப்போதும் தனிப்பெரும்பான்மையில்தான் உள்ளோம். ஆனால் அதிமுக கூட்டணியில் அவரவர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர்கள், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தனபால் மீது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என 25 பேர் உள்ளனர். இவர்கள் ஒருவேளை மாற்றி வாக்களித்துவிட்டால் சபாநாயகரை மாற்றவேண்டி வரும்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img