தேனி:
மக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண் என்றும் ஊழல் செய்து சேர்த்த பணம் என ஊருக்கே தெரிந்தாலும்கூட செலவு செய்தால் ஜெயித்துவிடலாம் என்றும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் வேதனை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதிமுக வில் இருந்து பிரிந்த அமமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதியாக தேனி, சிவகங்கை உள்ளிட்ட சில தொகுதிககள் பார்க்கப்பட்டது.
குறிப்பாக தேனியில் நிச்சயம் அமமுகவே வெல்லும் என்ற அளவுக்கு பார்க்கப்பட்டது. அதனால் அங்கு அந்த கட்சியின் வலிமையான வேட்பாளரான தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டார். ஆனால் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் அதிரடியாக வெற்றி பெற்றார். அமமுகவின் தங்க தமிழ்செல்வன் 3வது இடத்தையே பிடித்ததோடு டெபாசிட்டை பறிகொடுத்தார்.
இதேபோல் தான் அமமுகவினர் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தனர். 3வது,4வது இடத்தையே பிடித்தனர். இதனால் அமமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதுதொடர்பாக தனியார் வாரஇதழ் ஒன்றுக்கு தங்கதமிழ்செல்வன் அளித்த பேட்டியில், தேனியில் அதிமுக முன்னாடி வந்து எப்படி என்றே தெரியவில்லை. என்னமோ நடக்குது. நடந்துவிட்டுப் போகட்டும். எப்படிப் போகுதுன்னு தெரியவில்லை. மேலே பாஜக ஜெயிக்குது. தமிழ்நாட்டில் திமுக ஜெயிக்குது. மக்கள் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டதாக தெரிகிறது.
அதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது என்பதில உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் திமுகவுக்கு ஓட்டுபோட்டுள்ளார்கள். நாங்கள் வெற்றிபெறாமல் போன அதிமுக வந்துவிடும் என்ற அச்சத்தில் திமுகவுக்கு மக்கள் ஓட்டு போட்டிருக்கலாம். ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எப்படி பட்டவர் என்பது ஊருக்கு தெரியும். அவர்கள் ஏதேனும் கிரிமினல் வேலைகளை செய்து முன்னணிக்கு வந்திருப்பார்கள்.
இனி மக்களுக்கு சேவை என்பது எல்லாம் வேஸ்ட். 200 கோடி பணம் இருந்தால் போதும். கட்சி , சின்னம் எதுவும் தேவையில்லை. ஊழல் செய்து சேர்த்த பணம் என தெரிந்தாலும்கூட செலவு செய்தால் ஜெயித்துவிடலாம். ஊழலை மக்கள் பெரிதாக நினைப்பதில்லை" இவ்வாறு வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்