நேற்று இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கட்சிக்கு 14இடமும்,அதிமுக அணிக்கு 3 இடமும், 5 இடங்களில் இழுபறி நிலை இருக்கும் என்று அறிவித்தனர். இதனால் தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வராது என்ற நிலை உருவாகியுள்ளதால் அதி முக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய அந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் வெல்லும் என சொல்லப்பட்டது. மீதமுள்ள 5 இடங்களில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் அதானல் அந்த 5 தொகுதிகளில் இழுபறி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஆட்சி இழக்கும் நிலை அதிமுகவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. திமுகவோடு சேர்ந்து தினகரன் ஆட்சியை கலைக்க முயற்சி செய்வதை தடுக்க சசிகலாவிடம் சமாதானம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச அவரது மனைவியை பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறைக்கு அனுப்பி யதாக ஒரு செய்தி வெளியானது. அதை உறுதி செய்யும் விதமாக சசிகலாவை முதல்வர் மனைவி சந்தித்தது குறித்து உறுதியான தகவலை அதிமுக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஓ.பி.எஸ் மனைவியும் சந்தித்தாக கூறப்பட்டது ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்