செவ்வாய் 20, ஏப்ரல் 2021  
img
img

தேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன?
திங்கள் 20 மே 2019 18:32:10

img

கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,18 சட்டமன்ற இடைத்தேர்தல்  தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. நேற்றைய தினம் அணைத்து கட்ட தேர்தல்களும் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது.இதில் தமிழ கத்தில் திமுக கூட்டணி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், மத்தியில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் வெளி யிட்டனர். மேலும் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புயுள்ளது என்றும் கருத்துக்கணிப்பில் வெளிவந்தன.

இந்த கருத்துக்கணிப்பில் அதிமுக கட்சிக்கு தேனி தொகுதியிலும், பாஜக கட்சிக்கு கோயம்பத்தூர்,குமரியிலும், பாமக கட்சிக்கு தருமபுரி தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றிவாய்ப்பு இல்லை என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.இது பற்றி விசாரித்த போது தேமுதிகவில் நிகழும் உட்கட்சி பூசலும், தேர்தல் செலவுக்கு கட்சி தலைமையிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லாததும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இன்னும் சிலர் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றதை தொண்டர்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். 

இந்த தேர்தலில் கமல், சீமான் கட்சிகள் புது வாக்காளர்களின் வாக்குகளை பெற்றதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.தேமுதிக தலைவர் விஜய காந்த் உடல்நிலை சரியில்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபடாததும் தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.மே 23க்கு பிறகு தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்பதை பொறுத்தே தேமுதிகவின் அடுத்தகட்ட அரசியல் மூவ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img