நேற்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவில் தமிழகத்தில் திமுகவும், மத்தியில் பாஜகவும் முன்னிலையில் இருப்பதாக பிரபல தனியார் தொலைக்கா ட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்தனர்.இந்த நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர் காலத்தில் அரசியலில் பெரும் மாற்றத்துக்கான சக்தியாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் அணைத்து கட்சிகளும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் அதிமுகவின் பெருவாரியான வாக்குகளை தினகரனின் அமமுக கட்சி பிரித்ததாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் சொல்கி ன்றனர். இதனால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் பெருவாரியான நடுநிலை வாக்குகளை பிரித்ததாகவும் மற்றும் புது வாக்காளர்களின் வாக்குகளை பெற்றதாகவும் கூறப்படுகிறது. கமலுக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் வரவில்லை என்றாலும் அடுத்த வரவிருக்கும் தேர்தலில் ஒரு முக்கிய அரசியல் சக்தி யாக இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.இதன் மூலம் நடுநிலை வாக்குகளை கவரும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் உரு வெடுத்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்