img
img

சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம்; ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா...
வியாழன் 16 மே 2019 15:53:22

img

சென்னை:

சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம் ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவல் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. நடிகர் சஞ்சய்தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் இருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை ஆனார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்ச ரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளன் தரப்பில் எரவாடா சிறை அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு சிறை அதி காரிகள் பதில் அளிக்கவில்லை. அதே நேரம், மத்திய அரசு அனுமதி இல்லாமல் தண்டனை காலத்துக்கு முன்பே சஞ்சய்தத் விடுதலையானார் என்று தக வல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம் ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img