சென்னை:
"திரும்பவும் தான் பேசியது வரலாற்று உண்மை என்று கமல் சொல்லி உள்ளார். ஒரு தீவிரவாதியின் மதத்தை ஆராய வேண்டிய தேவை கிடையாது. தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசாமல் கமல் இருப்பது நல்லது" என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசிய பேச்சினை அரசியலையும் தாண்டி திரை உலகினரில் சிலரும் கண்டித்து வருகிறார்கள்.
குறிப்பாக, நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனங்களை பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தனது ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது: "தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என நாம் நிறுவ முயற்சிக்கும்போது, கமலின் கருத்து தேவையில்லாதது. அந்த 2 வரிகளை மட்டும் பெரிதுபடுத்தி வெறுப்பை உமிழ்வது, இன்னும் பெரிய பிரச்சினை. இந்த இரண்டையும் நான் கண்டிக்கிறேன். அதிகம் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என பொதுமக்கள் முடிவெடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
தங்களுடைய மறைமுக நோக்கத்தை நிறைவேற்றி கொள்ளவும், கைத்தட்டல்கள் வாங்கவும் இப்படி சர்ச்சையான விஷயங்களை எல்லாம் தலைவர்கள் பேசக்கூடாது. ஒழுக்கமில்லாத, பிரிவினை உண்டாக்கும் கருத்துகளை ஒடுக்க, போதிய விதிமுறைகளும் நமது அமைப்பில் இருக்க வேண்டியது கட்டா யமாகும்.
தான் பேசியது வரலாற்று உண்மை என மீண்டும் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஒரு தீவிரவாதியின் மதத்தை ஆராய வேண்டிய தேவை என்ன? அதை கருத்தில் கொள்ளக்கூடாதுதானே? தனது கருத்தை நிரூபிக்க, கமல்ஹாசன் தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பது நல்லது" என பதிவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்