தமிழகத்தில் வரும் 19ம் தேதி சூலூர்,அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் அமைச்சர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வர் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது அத்தொகுதி மக்கள் "எங்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணை என்னாச்சு" என பட்டியலின மக்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.
இதனால் டென்ஷன் ஆன ஓபிஎஸ், "தனிப்பட்ட முறையில் என்னை வந்து பாருங்கள், நான் பதில் கூறுகிறேன்" என கூறி விட்டு, பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு எஸ்கேப் ஆனார் ஓ.பி.எஸ். இது பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பிரச்சாரத்தின் போது எங்களது கோரிக்கை களை கேட்டோம் அதற்கு பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்து கொண்டு என்னை தனிப்பட்ட முறையில் பார்த்து கோரிக்கைகைளை கொடுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் என்று அதிருப்தியாக கூறினார்கள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்