img
img

ஆ.இராசாவை தலைவராக்கிவிடுங்கள்... சீமான் பேச்சு...
வெள்ளி 10 மே 2019 15:48:52

img

வாய்ச்சொல் வீரரின் கர்ஜனை என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஒரு செய்தி போடப்பட்டிருந்தது. அதில், ''மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை நேரில் சந்திக்கிறார். வீதியில் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். நடந்து செல்வது மட்டுமல்ல திண்ணையில் அமர்ந்தும் பேசுகிறார். ஸ்டாலினின் இந்த அணுகுமுறை மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. 

ஒரு போர்ஜரி வீரர் இருக்கிறார். அவர் யாரைத் தமிழர் என்று சொல்கிறார்களோ அவர் மட்டுமே தமிழர். இந்த மாமனிதர் தம்மை மாவீரர் என்று நினைத்துக்கொண்டு உரையாற்றுவார். ஸ்டாலின் திண்ணையிலே போய் உட்காருகிறார். டீ சாப்பிடுகிறார். வீதியிலே நடக்கிறார். முதல்வரானால் இப்படித் திண்ணையிலே போய் அமர்ந்து டீ குடிப்பாரா? வீட்டிலே இருந்து பிளாஸ்கிலே எடுத்து வந்து அல்லவா குடிப்பார் என்று பேசி இருக்கிறார்.

அயோத்திதாசப் பண்டியர் பற்றி திமுககாரர்களுக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அயாத்திதாசரைப் பற்றியும், அம்பேத்கரைப் பற்றியும் கர்ஜனை வீரருக்கு அய்யம் ஏதாவது வந்தால் ஆ.இராசாவைப் போய் பாருங்கள். இல்லையெனில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து அவரை அழையுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் 09-05-2019 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் மொ.வெ.விஜயராக வனை ஆதரித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

''முரசொலியில் தலையங்கமே நான்தான் இன்றைக்கு. என்னை வாய்ச்சொல்லில் வீரர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்போது உங்கள் செயல் தலைவர் அனைத்தும் செயலா? என்ன உங்கள் பிரச்சனை? ஐம்பது வருடமாக கச்சத்தீவை மீட்கப் போராடுவோம் என்கிறீர்களே? அதைவிடவா ஒரு கேவலம் இருக்கு? வாய்ச்சொல் இருக்கு? என்னிடம் வாய் கொடுத்து புண்ணாக்கிக்க வேண்டாம். ஏதோ என் சொந்தக்காரர்களெல்லாம் அந்தக் கட்சியில் இருப்பதால் மன்னிச்சி கடந்து போயிக்கொண்டிருக்கிறேன்.

தேவையில்லாமல் என்னை நோண்ட வேண்டாம். அது என்ன அயோத்திதாசரை தெரியுமா? இரட்டை மலை சீனிவாசனைத் தெரியுமா? ஆ.இராசாவை கேட்டுப்பார். ஆ.இராசாவுக்குத்தானே திமுகவில் இரட்டைமலை சீனிவாசனை, அயோத்திதாசரைப் பற்றி தெரியும். அவரை தலைவராக்கிவிடுங்கள்''. இவ்வாறு பேசினார். 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img