இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் "ஜனநாயகத்தின் வழியாக பிரதமரை ஓங்கி அறைய வேண்டும் என்று" பேசினார். அதன் தொடர்ச்சியாக இன்று மேற்கு வங்க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி ,"மம்தாவிடம் அறை வாங்கினால் கூட ஆசீர்வாதமாகத் தான் எண்ணுவேன்" என்று பதில் கூறினார்.
மேலும் இதற்கு முன் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் நிறைய முறைகேடான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இதை வைத்து தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பலர் சம்பாதித்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார். இதற்கு தற்போது பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, "எங்கள் மீதான நிலக்கரி மாபியா குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போட தயாராக உள்ளீர்களா?" என பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்டுள்ளார். இவ்விரு தலைவர்களும் அடுத்தடுத்து இப்படி பேசிக்கொள்வது அரசியல் வட்டாரத்தில் புது மையாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்