பாமகவில் இருந்து விலகி ''அனைத்து மக்கள் அரசியல் கட்சி''யை தொடங்கிய ராஜேஸ்வரி ப்ரியா நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
சென்னையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலத்தில் வியாழக்கிழமை மனு அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தெரிந்தால்கூட அந்த தொகுதி தேர்தலையே ரத்து செய்ய வேண்டும். அது எப்படி ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் ரத்து செய்கிறார்கள். எல்லாமே கண்துடைப்பு. முழுமையாக நடக்கிற அநீதியில் ஓரளவு நடவடிக்கை எடுத்துவிட்டு, நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கண்துடைப்பு செய்கிறார்கள்.
தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என்று சொல்லியிருக்கிறார்கள். தருமபுரியில் எல்லா வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்துள்ளது. கண்துடைப்புக்காக தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என்று அறிவித்திருக்கிறார்கள். தர்மபுரி தொகுதியில் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும். ஏனென்றால் அன்புமணி அவரது தொண்டர்களையே தூண்டிவிட்டிருக்கிறார். நம்மதான் பூத்தில் இருக்கப்போறோம். நம்மதான் பூத்தில் இருக்கப்போறோம். புரியுதா, புரியுதான்னு கேட்டிருக்கிறார்.
இது தேர்தல் ஆணையத்திற்கு புகாராக போயிருக்கிறது. அவர்களும் விட்டுவிட்டார்கள். இதெற்கெல்லாம் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லையா?. இது ஜனநாயகமா? முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம். படித்தவர்கள் இதுபோல செய்யலாமா?
தேர்தலில் விதி மீறல் நடந்ததை வீடியோ எடுத்து கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களை தூண்டிவிட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் எதற்கு ஓட்டுப்போட வேண்டும், எதற்கு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் செய்வதில் முக்கியமான கொள்கையாக எடுத்து கடைசி வரைக்கும் போராட உள்ளேன் என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்