டெல்லி:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தேவேந்திர குமார் ஷெராவத் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த வெள்ளி அன்றுதான் ஆம் ஆத்மி எம்எல்ஏ அணில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு இது போதாத நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். வரிசையாக அந்த கட்சி நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. காங்கி ரஸ் உடன் கூட்டணி வைக்க முடியாதது, அரவிந்த் கெஜ்ரிவாலை சாலையில் நபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது என்று வரிசையாக நிறைய சோதனைகளை அக்கட்சி சந்தித்து வருகிறது.
ஏற்கனவே கட்சியில் உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல் வருகிறது. பாஜக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை காசு கொடுத்து வாங்க பார்க்கிறது என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் அவர் இப்படி குறிப்பிட் இருந்தார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு 10 கோடி கொடுப்பதாக அமித் ஷா பேரம் பேசி இருக்கிறார் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அணில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தார்
இதையடுத்து தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தேவேந்திர குமார் ஷெராவத் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் மத்திய பாஜக அமைச்சர் விஜய் கோயல் முன் அவர் பாஜகவில் இணைந்தார். 3 நாட்களில் 2 எம்எல்ஏக்கள் கட்சி மாறியது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்