தம்லுக்:
போனி புயலை வைத்துக் கூட மம்தா அரசியல் செய்கிறார் என பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.
ஒடிசாவில் போனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு, மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றார் பிரதமர் மோடி. அங்கு, தம்லுக் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ஸ்பீட் பிரேக்கர் மம்தா, போனி புயலில் கூட அரசியல் செய்கிறார். புயல் விவரங்களை கேட்டறிய அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அகந்தை காரணமாக அவர் என்னுடன் பேச மறுத்து விட்டார். மீண்டும் அவருடன் பேச முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
சமீப காலமாக மம்தா கடும் விரக்தியில் உள்ளார். அவர் கடவுளை பற்றி கேட்க விரும்பவில்லை. அதனால் தான் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற மந்திரத்தை ஜபிப்பவர்களை மம்தா கைது செய்து, சிறையில் அடைத்து வரும் சூழல் உள்ளது என்றார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலிலும், ஒடிசாவை போன்று மேற்குவங்க அரசையும் தொடர்பு கொண்டு புயல் பாதிப்புக்கள் குறித்து கேட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் மேற்குவங்க அரசை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை மேற்குவங்க அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்