புதுடில்லி:
ஒடிசாவைத் தாக்கிய போனி புயலால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், தொலைப்பேசி கோபுரங்கள் சாய்ந்த போதும் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.
வானிலை மையத்தின் நவீன தொழில்நுட்ப வசதிகள் போனி புயலின் போக்கை துல்லியமாகக் கணித்தன. தமிழகத்தை அச்சுறுத்திய போனி புயல் ஒடிசாவை நோக்கி நகரத் தொடங்கியதும் ஆந்திராவின் அமராவதி நகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் ரியல் டைம் கவர்னன்ஸ் சொசைட்டி எனப்படும் அமைப்பின் உதவி ஒடிசா அரசுக்கு வழங்கப்பட்டது.
உயிர்ச் சேதங்களைத் தவிர்க்கவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் மீட்பு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் உதவிய இந்த தொழில்நுட்பம் மூலம் புயலின் ஒவ்வொரு நகர்வும் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்பட்டன. ஒடிசா பக்கம் புயல் நகர்கிறது என்பதை அறிந்த அடுத்த நிமிடமே ஒடிசா அரசுடன் ஆர்டிஜிஎஸ் வல்லுனர்கள் தொடர்பில் இருந்தனர். அரசுக்கு எச்சரிக்கைகளை விடுத்த வண்ணம் வாட்ஸ் ஆப் மூலம் முக்கிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக புயல் தாக்கிய பின்னர் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு தாக்கிய புயலில் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த முறை பல லட்சம் பேர் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதும் புயல் தாக்கத்தை கட்டுப்ப டுத்தியுள்ளது. ஆந்திர அரசின் இந்த உதவிக்கு ஒடிசா அரசு நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்