தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.ஈஸ்டர் பண்டிகையான நேற்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.ராஜஸ்தா னில் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். புனிதமான பண்டிகை நாள் ஒன்றில் இப்படி கொடூரமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவம் மிக கொடுமையான ஒன்று.
நீங்கள் வாக்களிக்க செல்லும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின் தாமரை சின்னத்தை பாருங்கள். அதை நீங்கள் அழுத்தினால் தீவிரவாதம் ஒழியும். நாங்கள் தீவிரவாதத்தை அழிப்போம். இலங்கையில் நடந்தது போன்று இந்தியாவில் நடக்காமல் இருக்க நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் வாக்குக்கு சக்தி இருக்கிறது. நீங்கள் தாமரைக்கு வாக்களித்தால் தீவிரவாதத்திற்கு எதிராக நான் போராட முடியும். நாடு பாதுகாப்பாக இருக்கும்.
உலகம் முழுக்க இப்படி தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது இலங்கையில் இப்படி தாக்குதல் நடந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்