img
img

மெஹந்தி சர்க்கஸ்
வியாழன் 18 ஏப்ரல் 2019 19:08:08

img

வலுவான காதலை இலகுவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரவண இராஜேந்திரன். ரோஜா மலரில் பனித்துளிகள் விழுவதைப்போல் இதயத்தை ஈரமாக்கியது ராஜூ முருகனின் வசனங்கள்.

மும்பையிலுள்ள மெஹந்தி சர்க்கஸ் கம்பெனி ஒன்று ஊட்டிக்கு வருகிறது. அந்த கம்பெனியின் நட்சத்திரம் ஸ்வேதா திரிபாதி. சர்க்கஸ் விளையாட்டில் அவர் ஒரு பலகையில் சாய்திருக்க அவரின் மீது கத்திகள் படாமல் அவரின் அருகில் எறிய வேண்டும். இதுதான் அந்த சர்க்கஸில் உச்சக்கட்ட காட்சியாக இருக்கிறது.

சர்க்கஸை பார்க்கவரும் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி மீது காதல் கொள்கிறார். இந்தக் காதலை ஸ்வேதாவின் அப்பா சன்னி சார்லஸ் எதிர்க்கிறார். தனது மகள் மீது ஒன்பது கத்திகளை அவள் மீது படாமல் அவள் அருகில் எறிய வேண்டும். அப்படி எறிந்துவிட்டால் திருமணம் செய்து தருவதாக சொல்கிறார். இதனால் ரங்கராஜ் கத்தி எறியும் கலையை பயின்றும் ஸ்வேதா மீது கத்தியை எறிய முடியவில்லை.

சர்க்கஸை வேறு ஊருக்கு மாற்றப்போவதாக சொல்கிறார் ஸ்வேதாவின் தந்தை சன்னி சார்லஸ். இதனால் ஸ்வேதாவும் ரங்கராஜும் ஊரைவிட்டு ஓடி விடுகிறார்கள்.ரங்கராஜின் அப்பா மாரிமுத்து ஜாதிவெறி பிடித்தவர். தனது மகன் ஒரு சர்க்கஸ்காரியோடு ஓடிப்போனதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மகனை தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்.

சர்க்கஸ் கூடாரத்தையும் தீ வைத்து கொளுத்திவிடுகிறார்.  சன்னி சார்லசும் தனது மகள் ஸ்வேதாவுக்கு, தனது சர்க்கஸில் கத்திய எறியும் அன்கூர் விகாலுக்கு திருமணம் செய்துவைத்துவிடுகிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் ரங்கராஜ் திருமணம் செய்து கொள்ளாமல் ஸ்வேதா நடத்தும் மெஹந்தி சர்க்கஸ் எந்த ஊரில் நடக்கிறது என்று தேடித்தேடி அலைகிறார். வருடங்களும் கடந்து விட்டன. ஸ்வேதாவின் மகளும் பெரியவளாக வளர்ந்துவிட்டாள்.

இதுவரை பழைய சினிமா காதல் கதையை சொன்ன இயக்குநர், இனிமேல்தான் எது காதல் என்பதை அழகாக விளக்கியிருக்கிறார். இதற்காக அவரை பாராட்ட வேண்டும். ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய காத லன் ரங்கராஜை தேடி வருகிறார்.

எதற்காக அம்மாவின் காதலனை மகள் தேடிவரவேண்டும் என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது."மனசில் இருப்பவன்தான் புருஷன், உடம்பை அனுபவித்தவன் இல்ல" என்ற  ராஜூ முருகனின் வசனம், காதல் சோலை யில் விதைக்கப்பட்ட விதைகள்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img