img
img

பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பிரச்சாரம்..பயந்தோடும் கூட்டணி கட்சிகள்
சனி 13 ஏப்ரல் 2019 14:18:52

img

சென்னை:

பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாள்தான் இருக்கு.. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாராம்.. அதை 2 நாளில் நமக்கு சொல்வாராம் பிரேமலதா!விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லைன்னு நமக்கு தெரியும். அதனாலதான் 4 வருஷமா ஒதுங்கியே இருக்கார். பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி உட்பட கட்சியின் பொறுப்புகளிலும் நிறைய மாற்றம் கேப்டன் கொண்டு வந்தார்.

கூட்டணி சம்பந்தமான விஷயம் வரும்போதும், பிரேமலதாவும், சுதீஷூம்தான் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார்கள். நேர்காணலின்போதும் விஜயகாந்த், தன் ஒற்றை விரலால் தொண்டையை காரணம் காட்டி பேச முடியாது என்று சைகையால் சொல்லிவிட்டார்.

அமெரிக்காவில் இருந்து ஊருக்கு வந்ததில் இருந்து இதுவரை மக்களிடம் விஜயகாந்த் பேசவே இல்லை. தன் கட்சி தொண்டர்களிடம் கூட தேர்தல் சம்ப ந்தமாக உற்சாகம் தரும்படி எதுவுமே சொல்லவில்லை. இப்போதைக்கு விஜயகாந்த்தால் பிரச்சாரம் செய்ய முடியாது என்று டாக்டர்களும் சொல்லி விட்டார்கள். அதற்கேற்றபடிதான் இத்தனை நாளாக பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர்.

அந்த கட்சி சார்பில் போட்டியிடும் சுதீஷ் என்ன பேசுகிறார் என்றே வெளியில் தகவல் வரவில்லை. விஜய பிரபாகரனோ சமீப காலமாகத்தான் பிரச்சாரம் செய்து வருகிறார். அதுகூட எப்போது என்ன வார்த்தையை பேசிவிடுவாரோ என்று நமக்கு ஒரு பக்கம் அள்ளு கிளம்புகிறது. கட்சியின் பிரச்சார பீரங்கி யான பிரேமலதாவோ தினமும் எதையாவது ஒன்றை பேசி பல்பு வாங்கி வருகிறார். சில சமயம் பிரச்சார வேனை விட்டு கூட கீழே இறங்குவதில்லை.

இவ்வளவும் தன் பக்கம் வைத்து கொண்டு, விஜயகாந்த் பிரச்சாரம் செய்வாரா, மாட்டாரா என்பது குறித்து இன்னும் 2 நாளில் தெரிவிப்பேன் என்று பிரே மலதா சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது சொல்லிவிட்டு போகிறார். ஆனால் "வருவார், வந்து கொண்டிருக்கிறார், வந்து விடுவார்" என்று கூறி மக்களை ஏமாற்றப் பார்த்தால் அது தேமுதிகவுக்கே எதிராக போகும். பிரேமலதா எப்போதான் மக்களை சரியாக புரிந்து கொள்வாரோ!

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img