img
img

விசிக - பாமக மீண்டும் மோதல் போக்கு ?
புதன் 10 ஏப்ரல் 2019 13:01:38

img

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் வாக்கு வங்கி இருக்கும் கட்சியாக பார்க்கப்படுவது பாமக . இந்த நிலையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குற்றம் சாட்டி ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் . அதில் தேர்தலில் தோல்வி பயத்தின் காரணமாக விசிக கட்சியினர் பாமக போட்டியிடும் தொகுதிகளில் வன்முறையை தூண்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாதிரியான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்க செயல்கள் ஆகும் . தேர்தலை நேர்மையாகவும் , சுதந்திரமாகவும் நடைபெறவும் தோல்வி பயத்தில் கலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடும்  அவர்கள் மீது  சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதோடுமட்டுமில்லாமல் அத்துடன் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வேட்பாளர்களும் எந்தவிதமான தடையுமின்றி வாக்கு சேகரிப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் அளிக்கும் பொய்யான புகார்களின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவதையும் தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார் . இதனால்  மறுபடியும் பாமக விசிக கட்சியினர் இடையே ஒரு வித மோதல் போக்கு உருவாகும் சூழல் உருவாகியுள்ளது . இந்த போக்கை தடுக்கும் வகையில் காவல் துறையும் , தேர்தல் அணையும் செயல்பட வேண்டும் . இரண்டு கட்சியினரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று தொகுதி மக்கள் கருதுகின்றனர் . 
 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img