சென்னை:
"எங்கிருந்துதான் இதெல்லாம் வருது.. காங்கிரசில் இருந்து விலகுகிறேனா? நானா?" என்று குஷ்பு கேள்வி எழுப்பி அதற்கான விளக்கத்தை அளித்து ள்ளார். சீட் விவகாரம் பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, சென்னையில் கராத்தே தியாகராஜனுக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்று சொல்ல ப்பட்டது. பிறகு அது இல்லாமல் போனது. 10-ல் ஒன்று பாண்டிச்சேரிக்கு போக, மீதமுள்ள 9 சீட்டில் குஷ்புக்கு ஒன்று தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக திருச்சி அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்றும், அதற்காக வேட்புமனுகூட தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியாகியது. அதுபோல குஷ்புவும் போட்டியிட என்னவோ ஆர்வம் காட்டிதான் வந்தார். இதை பற்றி கேட்டதற்கு, "ராகுல்காந்தி என்ன சொல்கிறாரோ, அதற்கு கட்டுப்படுவேன்" என்றும் வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் 9 பேர் லிஸ்ட்டில் குஷ்பு பெயர் இல்லை. அதனால் பிரச்சாரத்துக்குதான் வழக்கம்போல் வருவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பிரச்சாரமும் செய்யவில்லை. பிரச்சார கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறார் என்ற தகவல்கள் பறக்க ஆரம்பித்தன. இப்போது இதற்கு குஷ்புவே ஒரு ட்வீட் போட்டு எல்லாருடைய வாயையும் ஆஃப் செய்துள்ளார்!
அந்த ட்வீட்டில், "காங்கிரஸிலிருந்து விலகுகிறேனா? எங்கே இருந்துதான் இதுபோன்ற செய்திகள் எல்லாம் வருகிறது? இந்த நாட்டை உருவாக்கிய ஓர் இயக்கத்தின் அங்கமாக நான் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் ஊழியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நான் ராகுல் காந்தியை மிகவும் நம்பு கிறேன். நாளை முதல் தென் மாநிலங்கள் முழுவதும் பிரச்சாரம் தொடங்குகிறேன். டைம் இருந்தால் வடமாநிலங்களிலும் பிரசாரம் மேற்கொள்வேன். ஐ யாம் காங்கிரஸ்" என்று தெரிவித்துள்ளார்.
இருந்தாலும்.. பாஜகவில் சேர்ந்த மறுநாளே ஜெயப்பிரதாவுக்கு சீட் தரப்பட்டது! மராட்டியத்தில் கட்சியில் சேர்ந்த மறுநாளே ஊர்மிளாவுக்கு சீட்டு தரப்ப ட்டது. ஆனால் கட்சியில் 7 வருஷமாக இருக்கும் குஷ்புக்கு சீட்டு வழங்காதது மனசு அளவிலாவது குஷ்புக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும் என்று பரவலாக பேசப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்