img
img

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்.. முன்னாள் நீதிபதிகள், துணைவேந்தர்கள்
சனி 06 ஏப்ரல் 2019 13:54:21

img

சென்னை:

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் மத்திய அரசு அலுவலகங்களில் பாஜகவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இதற்கு முன்னால் இந்தியாவில் நடந்தவை போல் அல்ல. அரசியல் கட்சிகளுக்காகவோ கூட்டணி கட்சிகளுக்காகவோ நடக்கிற அதிகார போட்டி அல்ல. இந்தியா ஒரு குடியரசு நாடாக, ஜனநாயக நாடாக, மனித நெறிமுறைகளை காப்பாற்றிக் கொள்கிற நாடாக தொடர போகிறதா இல்லையா என்பது நம் முன்னால் உள்ள கேள்வி. இந்த கேள்வி எழுவதற்கான காரணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வலிமை பெற்றுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த 5 ஆண்டுகளாக ஒரு அபாய சங்கு ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டு காதில் போட்டுக் கொள்ளாமல் எப்போதும் போல் பொறுப்பற்ற வகையில் நடந்து விட கூடாது என்பதற்காக ஒரு எச்சரிக்கையாக நாங்கள் இந்த அப்பீலை கொடுத்துள்ளோம். உத்த ரப்பிரதேசத்தில் ஒருவர் சொல்லியிருக்கிறார் 2019 தேர்தல்தான் இறுதி தேர்தலாக இருக்கும் என்று. அப்படியென்றால் என்ன அர்த்தம்? அதற்கு பிறகு ஜனநாயகம் இருக்காது, சர்வாதிகாரம்தான் இருக்கும். ஒரு தலைவனின் காலில் மண்டியிடுகிற எதேசதிகார போக்கு நிலவும்.

ஜனநாயக நாட்டினுடைய நிறுவனங்களெல்லாம் இன்று நாசப்பட்டுள்ளன. அவற்றினுடைய சுய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. எந்த நிறுவனமும் இன்றைக்கு நம்பிக்கைதன்மை போன்றதாக இல்லை. அதனால் ஜனநாயகத்தினுடைய அடிப்படைகள் எல்லாம் இன்று ஒழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகள் இதே ஆட்சி மீண்டும் வந்துவிட்டது என்றால் அதன் விளைவு மிக கொடூர விளைவாக இருக்கும். நாட்டின் அனைத்து நிறுவனங்களும் அடகு வைக்கப்பட்டுவிட்டன. இதை கல்வித் துறையில் நாங்கள் மிக அதிகமாக பார்த்து கொண்டிருக்கிறோம். இந்திய வர லாற்று நிறுவனத்தில் வரலாறு தெரியாதவர்களே பணியில் உள்ளனர். கல்வியை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு செல்ல பாஜக முயற்சி செய்கிறது.

மக்களுடைய பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, படைப்புரிமை, வழிபாட்டு உரிமை, திருமண உரிமை என அனைத்தும் இன்று மறுக்கப்ப டுகின்றன. ஆகையால் இந்தியா என்றாலே பன்முகத்தன்மை என்ற ஒரு கலாசாரத்தை அழித்து ஒழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே நிறம் என இந்துத்துவ கலாசாரத்தை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு சனாதன கலாசாரத்தை மீண்டும் இந்த நாட்டில் நிலவுகிற அபாயம் ஏற்படும். பாஜக சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே இவற்றையெல்லாம் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் முன்னால் இருக்கும் அபாயம் என்ன என்பதை புரிந்து கொண்டு இந்த நாடு ஜனநாயக நாடாக, சுதந்திர நாடாக, எதேசதிகாரத்தை தூக்கி எறிந்த நாடாக, அரசியல் சாசன விழுமியங்களை ஏற்றுக் கொண்ட நாடாக இருக்க போகிறதா என்பதை உணர்ந்து உங்கள் வாக்குகளை போட வேண்டும் என்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img