அம்ரோகா: உலகமே இன்று இந்தியாவை மரியாதையுடன் பார்க்கிறது என்றால், அதற்கு நான் மட்டும் காரணமல்ல, 125 கோடி இந்தியர்களும் காரணம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் இந்தியா பதிலடி அளித்து வருகிறது என்றும், எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினால் இங்கு சிலர் அழுகி றார்கள் என்றும் கூறினார்.
உலகம் முன்பு பாகிஸ்தான் நடவடிக்கை வெளிப்பட்டு தலைகுனியும் நிலையில், இங்கு சிலர் அதற்கு ஆதரவாக குரல் எழுப்புவதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை சாடினார்.ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வழங்கப்படும் மிக உயரிய கௌரவமான பதக்கமான சயீத் விருது அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த விருது மோடிக்கானது அல்ல என்றும், ஒட்டு மொத்த இந்தியர்களுக்குமானது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய பின், மோடி மீண்டும் பிரதமராக 10 சதவீதம் ஆதரவு அதிகரித்து உள்ளது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை 8-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்