கரூர்
இந்த தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்பதாலேயே வருமானவரி சாதனை திட்டமிட்டு நடத்தப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.
கரூரை அடுத்த ராயனூர் திடலில், நடந்த பிரச்சாரக்கூடத்தில் பேசிய ஸ்டாலின், "நாங்கள் ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறோம். இதேபோல் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை சொல்லியும் வாக்கு கேட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பது போலவும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது போலவும் விமர்சித்து வருகிறார்கள். மக்களவை தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக காங்கிஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடும் என்பதாலேயே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. எடப்பாடி, ஓபிஎஸ் வீட்டில் ஏராளமான பணம் இருக்கிறது என்று சொன்னால் வருமான வரிசோதனை நடத்துவார்களா? ஏன் ரபேல் பணம் மோடி வீட்டில் நிறைய இருக்கிறது என்று சொன்னால், மோடி வீட்டில் வருமான வரிசோதனை நடத்துவார்களா" இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி ஸ்டாலின் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்