திண்டுக்கல்
"நாட்டில் இருக்கிற எல்லா குப்பையும் அள்ளிட்டீங்களா? நாட்டின் மிகப்பெரிய குப்பைகளே நீங்கள்தான். உங்களை அள்ளுவதுதான் சரியான கிளீன் இந்தியா" என்று சீமான் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூரலிகானுக்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது சீமான் பேசியதாவது: "ராகுல் காந்தி என்ன சொல்றார், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று, ஆனால் கொண்டு வந்தது யார்? இவங்கதானே? நாட்டை பாதுகாப்பதே நாங்கள்தான் என்கிறார் மோடி. ஆனால் நாட்டையே இவர்களிடம் இருந்து பாதுகாப்பது யார்?
கிளீன் இந்தியா' கொண்டு வந்தாங்க? நாட்டில் இருக்கிற எல்லா குப்பையும் அள்ளிட்டீங்களா? நாட்டின் மிகப்பெரிய குப்பைகளே நீங்கள்தான். உங்களை அள்ளுவதுதான் சரியான கிளீன் இந்தியா. இந்த திட்டத்துக்கு பேர் என்ன தெரியுமா? ஸ்வச் பாரத்... மிச்ச பாரத்தை என்ன செய்வீங்க.. வித்து தின்னு டுவீங்க.
கிளீன் இந்தியான்னா என்ன அர்த்தம் தெரியுமா? ஆறு, மலை, ஏரி குளம் இது எல்லாத்தையும் வித்துறதுதான். ஐயா மோடி, இங்க ஏரி, குளம் எல்லாம் இருந்துச்சே இப்போ எங்கே என்று கேளுங்க. அதுக்கு, "நாங்க சொன்னதை நீங்க கவனிக்கலையா, கிளீன் இந்தியான்னுதானே சொன்னோம். எல்லாத்தை யும் துடைச்சு சுத்தமா வெச்சிருக்கோம் பாருங்க" என்பார்.
உண்மையிலேயே எதுதான் தூய இந்தியா? சாதி மதம் இல்லாத... இந்த கோயிலுக்கு இவன் போகக்கூடாது, இந்த குளத்தில் இவன் குளிக்க கூடாது என்று பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவம் அற்ற சமூகத்தை தகர்ப்பதுதான் தூய இந்தியா. ரபேல் விவகாரத்தில் ஒரு ஃபைலை பாதுகாக்க தெரியலன்னா, எப்படி இந்த நாட்டு மக்களை இவங்க பாதுகாப்பார்கள்? இவ்வளவு பெரிய துணை கண்ட நாடான இந்தியா, ஒரு மாநில அளவுகூட இல்லாத பிரான்ஸ்கிட்ட போர் விமானம் வாங்குது.
பீரங்கியை ஒரு நாட்டில இருந்து வாங்குற.. துப்பாக்கியை ஒரு நாட்டில இருந்து வாங்குற.. அப்படின்னா நீ எதைதான் படைப்பாய். எல்லாத்திலயும் மேட் இன் ஜப்பான், மேட் இன் ரஷ்யா, மேட் இன் அமெரிக்கா, என் நாடு மட்டும் மேக் இன் இந்தியாவாக இருக்கு? அப்படின்னா நீ என்னத்த தான் தயாரிப்பே? ஊதுவத்தி, சாம்பிராணியையா?" என்று கேள்வி எழுப்பினார் .
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்