அதிமுகவில் இருக்கும் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி, அடாவடி கூட்டணி என்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் பேசப்பட்டுவரும் நிலையில், பிரச்சாரத்திற்கு முன்பே தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் அவர்களுக்குள் அடித்து கொண்டதும் கார் கண்ணாடிகளை உடைத்து கொண்டதும் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவந்தார். அதற்கான ஆலோசனை கூட்டத்தை தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிகட்சியினர் நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் விடுதியில் நடத்தினர்.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீர்காழி தேமுதிக நகர செயலாளர் செந்தில் என்பவரிடம், கேப்டன் மன்ற மாவட்ட செயலாளரான சேகர் என்பவர் "எதுக்கெடுத்தாலும் நீயே தண்ணிச்சையாக முடிவெடுக்கிற, என்னிடம் எந்த தகவலும் சொல்றதில்ல, பிரச்சாரத்துக்கு போறவங்களுக்கு எந்த வசதியும் நீ வாங்கி கொடுப்பதில்ல, என்ன நினைச்சிக்கிட்டு இருக்க தொலைச்சிப்பிடுவேன் " என்று வடிவேல் பானியில் ஒருமையில் பேசி இருக்கிறார்.
சேகரின் ஒருமையான பேச்சால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த செந்தில் சேகரை தாக்கியிருக்கிறார். இதில் காயமடைந்த சேகர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே பறந்து வழக்கு பதிவு செய்த காக்கிகள் தேமுதிக நகர செயலாளர் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.
இந்த சம்பவத்தின் போது பழைய பேருந்து நிலையத்தில் இரு தரப்பிற்கும் கல்வீச்சி நடந்து நிர்வாகிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாக னங்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவாகியிருக்கிறது. இதை கண்ட அதிமுகவினர் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்