சென்னை:
விபூதி, மாலை.. என பக்தி பழமாக காட்சியளித்த திருமாவளவனின் போட்டோவை வைத்து தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு அவரை கேலி செய்துள்ளது.. இந்துக்களின் வாக்குகளுக்காகவே திருமாவளவன் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் விமர்சித்துள்ளது.
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இதற்கான வாக்கு சேகரிப்பிலும் அங்கு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் சென்றார். அங்கு அவருக்கு அர்ச்சகர்கள் திரூநீறு பூசிவிட்டு, மாலை அணிவித்தனர். இதையடுத்து, நெற்றியில் பூசப்பட்ட விபூதியுடனேயே திருமாவளவன் அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
மற்றொரு பக்கம் "இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் வகையில் கூட்டணி அமைத்துள்ளது திமுக. சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய தொல் திருமாவளவன், இப்போது தில்லை சிதம்பரம் தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டு செல்லலாமா? ஓட்டுக்காக இப்படி நடந்து கொள்வதா?" என்று மற்றொரு பக்கம் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், திருமாவளவனை வைத்து பாஜக சம்பந்தமாக ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில், விபூதி பூசிய திருமாவளவன் புகைப்படத்தை வைத்து கார்ட்டூன் வரைந்து கேலி செய்துள்ளது. இந்துக்களின் வாக்குகளுக்காகவே திரு மாவளவன் இவ்வாறு செய்கிறார் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
அன்று "சனாதனத்தை ஒழிக்க நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களையும் இடித்து அகற்ற வேண்டும்" என்றும், "ஐயா இந்துக்களே! உங்க ஓட்ட எனக்கு போட்டு என்ன காப்பாத்துங்க ஐயா காப்பாத்துங்க" என்றும் கார்ட்டூனில் எழுதப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்