செவ்வாய் 07, ஏப்ரல் 2020  
img
img

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான்.. முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி
புதன் 03 ஏப்ரல் 2019 14:04:02

img

பாட்னா:

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முதல் முறையாக பிரதமர் இவ்வாறு கூறியுள்ளது பாஜகவிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட நிலையில், பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜமுய் மாவட்டத்தில் எல்.ஜே.பி வேட்பாளர் சிராக் பஸ்வானை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்தார்.

நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின் போது பேசியதாவது: எனது தலைமையிலான மத்திய அரசு, எங்களால் சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிக ளையும் நிறைவேற்றவில்லைதான். 70 வருடங்களாக காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அவர்களால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக கூற முடியவில்லை. எங்கள் அரசு வெறும் 5 வருடங்கள்தான் ஆட்சியில் உள்ளது. பிறகு எப்படி முழு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும். இருப்பினும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு முடிவுக்கு கொண்டுவந்துவிடும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை. நாங்கள் இட ஒதுக்கீட்டில் கை வைக்கவே மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் தனது 28 நிமிட பேச்சில், 23 முறை சவுகிதார் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பாதுகாவலர் என்ற அர்த்தம் வரும் இந்த வார்த்தைக்கு கூட்டத்தில் வரவேற்பு அதிகம் உள்ளது. மோடி இதை குறிப்பிடும்போது கைத்தட்டல்கள் அதிகமாக உள்ளன.

இதேபோல காங்கிரஸ் என்ற வார்த்தையை, 15 முறை நரேந்திர மோடி பயன்படுத்தினார். பாதுகாப்பு படையினர் தொடர்பாக 14 முறை வார்த்தைகளை பயன்படுத்தினார். ஆனால், வேலை வாய்ப்பு குறித்தோ, வேலைவாய்ப்பு இன்மை குறித்தோ, நரேந்திர மோடி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img