சாத்தூர்,
ஏப். 3- அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
சாத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். அவர் முதல்- அமைச்சர் பதவி ஆசையில் வெறிபிடித்து அலைகிறார். மக்கள் நீதி மயம் கட்சி களத்திலேயே கிடையாது. ஜெயிக்க முடியாத கட்சி என்ன வேண்டுமானாலும் கூறலாம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று குறிப்பிடலாம். நாங்கள் எப்போதும் எங்களது சாதனையை கூறியே ஓட்டு கேட்போம். தி.மு.க. இந்த தேர்தலில் அ.தி.மு.க.விடம் தோற்கும். அ.தி.மு.க. சினம் கொண்ட சிங்கம். தி.மு.க. மதம் கொண்ட யானை.
சினம் கொண்ட சிங்கத்திடம் மதம் கொண்ட யானை தோற்று ஓடும். கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சரை குறை கூறுகிறார் மு.க.ஸ்டாலின். இப்போது அவரது கட்சியினர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டபோது ஏன் வாய் திறக்கவில்லை. கொள்ளையடித்த பணம் இருந்தால் வரு மான வரித்துறையினர் சோதனை செய்யதான் செய்வார்கள். சாத்தூர் அ.ம.மு.க. வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் ரூ.40 கோடி பதுக்கி வைத்து ள்ளார். அவரது வீட்டிற்கு எப்போது வருமான வரித்துறையினர் சோதனை வரும் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்