சென்னை,
தலைவர் கருணாநிதி இல்லை என்றாலும், தளபதி ஸ்டாலின் அந்த இடத்தில் இருந்து ஆறுதல் தந்து எங்களை வழிநடத்துகிறார் என துரைமுருகன் தெரிவித்தார்.
வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து துரைமுருகன் செதியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வருமான வரி சோதனை முழுக்க முழுக்க அர சியல் உள்நோக்கம் கொண்டது. அரசியல் அரிச்சுவாடி தெரியாதவர்களால் நடத்தப்படும் சோதனை. வேலூர் மக்களவைத் தேர்தலையும், 2 தொகுதி இடைத்தேர்தலையும் தடுக்கும் முயற்சியாக தான் இந்த சோதனை ஏவப்பட்டுள்ளது. சோதனை செய வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கேட்டார்கள், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என தெரிவித்தோம்.
சோதனையில் ஒன்றும் இல்லை என்று திரும்பிச் சென்றுவிட்டார்கள். இந்த சோதனையால் என்னுடைய 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் தடைபட்டு போனது. வெற்றி பெற முடியாதவர்களால் போடப்பட்ட தப்பு கணக்கு தான் இந்த தொடர் சோதனை. முட்டாள் தனமான நடவடிக்கை. மக்கள் மனதில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது தெரியாமல் சோதனை நடத்துகிறார்கள்.
சோதனை என்ற பெயரில் என்னை அடித்தால் திமுகவினர் பயப்படுவர் என தப்புக் கணக்கு போடுகின்றனர். திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது. என்னை அடக்க நினைத்தாலும் தொண்டர்களின் அன்பு போதும் என்றவர், தலைவர் கருணாநிதி இல்லை என்றாலும், தளபதி ஸ்டாலின் அந்த இடத்தில் இருந்து எங்களுக்கு ஆறுதல் அளித்து வழிநடத்துகிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்