சேலம்,
சேலம் தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வத்தை ஆதரித்து சீலநாயக்கன்பட்டியில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை பிரச்சாரம் செதார்.
அப்போது அவர் பேசியதாவது: சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவ சாயிகளின் பசுமையான நிலத்தை அழித்து 8 வழிச்சாலையை கொண்டு வர முதல்வர் பழனிசாமி ஏற்பாடு செதுள்ளார். கல்வராயன்மலையில் உள்ள தாதுக்களை தனியார் மூலம் கொள்ளையடிக்கவே இத்திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது.
தற்போது பிரச்சாரத்திற்கு 1000 போலீசாருடன் பழனிசாமி வருகிறார். காரணம், எங்க நீங்கள் எல்லாம் மறித்து விடுவீர்களோ என்பதற்காக அப்படி வந்து போகிறார். அவருக்கு ஜால்ரா போடும் போலீஸ் அதிகாரிகள் மே 23ம் தேதிக்குப்பின் என்ன செகிறார்கள் என்று பார்ப்போம். ஜெயலலிதா மறைவுக்கு பின் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் செயாத துரோகமே இல்லை.
பணத்துக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார்கள். கட்சி தொண்டர்களுக்கு, மக்களுக்கு துரோகம் செத பழனி சாமியின் வேட்பாளர்கள், டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள். கல்லா பெட்டி பழனிசாமியை ஒழிக்க நான் பரிசு பெட்டியோடு வந்துருக்கேன். அதுவும் உச்சநீதிமன்றம் சென்று இந்த சின்னத்தை பெற்றுள்ளேன்.
மோடியா, லேடியா என கேட்ட ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் எனக்கூறிக்கொண்டு, தற்போது மோடியை எங்க டாடி என்கிறார்கள் வா கூசாமல். இவர்கள் எல்லாம் பணம் கிடைக்கிறது என்றால், அந்த பெட்டிக்குள் கூட சென்று படுத்துக்கொள்வார்கள். இந்த தேர்தல் முடிந்ததும், சேலம் மார்க்கெட்டில் பழனி சாமியை பார்க்கலாம். பழைய தொழிலுக்கு வந்துருவாருனு நான் சோல்றேன் இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்