சேலம்,
ஆண்டுகளாக ஆட்சி செய்த மோடி தமிழகத்துக்கு என்ன செய்தார்? இனி ஆட்சிக்கு வந்து என்ன செய்தவிடப் போகிறார்? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது: சேலம்-சென்னை இடையே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தி 8 வழிச்சாலை தேவை தானா?
இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியவர்கள், கஜா புயலுக்கு ஒதுக்கீடு செத தொகை எவ்வளவு? சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு, 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறியதால், நிலம் பறிபோ விடுமோ என்ற அச்சத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்து விட்டு சென்ற சேலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நெஞ்சு வலியால் இறந்தார். இதை பற்றி பேசிய என் மீது வழக்கு போட்டு அடக்கு முறையை கையாண்டனர். எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் வளமுடன் இருந்தவை.
அந்த நாடுகளில் விவசாயம் அழிக்கப்பட்டதால் அங்கு பஞ்சம் ஏற்பட்டது. அந்த நிலை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது. 5 ஆண்டுகளாக ஆட்சி செத மோடி தமிழகத்துக்கு என்ன செதார். இனி ஆட்சிக்கு வந்து என்ன செதுவிடப் போகிறார்.
50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செதுவிட்டது? அ.தி.மு.க.விடம் 37 எம்.பி.க்கள் இருந்ததால் தமிழகத்துக்கு என்ன பயன் கிடைத்தது. அநீதியை இழைத்த இவர்களுக்கா உங்கள் வாக்கு. ஒற்றை வாக்கு உலகை புரட்டிப்போடும் என்பதை உணர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
----------------------------------------
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்