சென்னை,
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செதுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம் எனும் சமூக அமைப்பினை துவக்கினார். இந்த இயக்கத்தினை தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கினார். இது தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து தமிழர் உரிமைகளைச் சார்ந்து இயங்கும் சமூக அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இதில் உரையாற்றிய திருமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவறான செதிகளை பரப்பியதாகவும், பொது மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செதுள்ளனர். மே 17 இயக்கத்தின் இதர ஆதரவாளர்கள் பெரியசாமி, அருள் முருகன், டைசன் ஆகியோரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செதிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்