மதுரை, மார்ச் 31- மதுரை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பேராசிரியை நிர்மலாதேவியின் வக்கீல் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறிய வழக்கில் கைது செயப்பட்டு சிறையில் ஒரு வருட காலம் அடைக்கப்பட்டிருந்த கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, தற்போது ஜாமீனில் உள்ளார். ஆனால் நிர்மலா தேவிக்கு ஆதரவாக வாதாடியவர் பசும்பொன் பாண்டியன்தான். சில தினங்களுக்கு முன்பு திடீரென செதியாளர்களை பசும்பொன் பாண்டியன் சந்தித்து பேசினார்.
அப்போது தான் ஒரு கட்சி ஆரம்பித்திருப்பதாகவும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தன் கட்சியின் சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் நேரடியாக போட்டியிட போவதாகவும் கூறினார். இந்நிலையில், அவருக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. அப்போது தேர்தல் அதிகாரி பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கினார்.
இந்த சின்னம் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்ட சின்னமாகும். தற்போது தினகரனுக்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் குக்கர் சின்னம் பசும்பொன் பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்