சேலம்,
நாடாளுமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போகும் என்று சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செதபோது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து நேற்று இரவு அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சேலம் தாதகாப்பட்டி, பட்டைக்கோவில், வின்சென்ட் பகுதியில் திறந்த வேனில் நின்று தேர்தல் பிரசாரம் செதார். நாடாளுமன்ற தேர்தலில் நல்லவர்களாக நாம் இணைந்து தர்மத்தை நிலை நாட்டக்கூடிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதர்மம் கொண்ட தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் தேர்தலை சந்திக்க உள்ளன.
அ.தி.மு.க. ஆட்சியில் தான் காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் யார் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செவார்கள்? என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஏன்? சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் யாராலும் ஒன்றும் செயமுடியாது. இந்த நாடாளுமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போவிடும்.
ஜெயலலிதா வழியில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்