திங்கள் 06, டிசம்பர் 2021  
img
img

நண்பனை குத்தி கொலைசெய்து வீட்டு வாசலில் புதைத்த நண்பர்கள்; காரைக்காலில் பரபரப்பு
வெள்ளி 29 மார்ச் 2019 16:57:35

img

இரண்டு வாலிபர்கள் சேரந்து நண்பனை கொலை செய்து வீட்டு வாசலில் புதைத்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை உரு வாக்கியுள்ளது. காரைக்கால் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ், அவரது மகன் ஹாஜாஷெரிப், இவரை சில நாட்களாக காணவில்லை, என பதறிய அவரது பெற்றோர் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து ஹாஜாஷெரிபை தேடிவந்தனர். அவரது நண்பர்களே கொலை செய்ததாக தகவல்கள் காரைக்கால் முழுவதும் கசியத் தொடங்கின. 

சந்தேகத்தின் பேரில் நண்பர்களான காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவநேசன் 28, ஆனந்த் 26, ஆகிய இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவா, விவேக் ஆகியோருடன் சேர்த்து ஹாஜாஷெரிபை அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்து கோட்டுச்சேரியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு புதைத்ததாக தெரிவித்து பகீர்கிளப்பினர்.

அவர்கள் காவல்துறை விசாரணையில் கொலை செய்தது ஏன் என்று கேட்டபோது, " கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் செல்வா என்பவன் காரைக்கால் கோட்டுச்சேரி அருகே நந்தா நகரில் நண்பர்களுடன் தங்கி ரேடியாலஜி படித்து வருகிறான். செல்வாவும் சிவாவும் நண்பர்களாக பழகினர்.  அதனால் சிவா வும் அவரது நண்பர்களான விவேக், சிவசேனான், ஆனந்த், ஷெரீப் உள்பட நான்கு நண்பர்களும் அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று மது அருந்து வதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

விவேக் மற்றும் ஹாஜாஷரிப் மீது காரைக்கால் பகுதியில் திருட்டு, கொள்ளை வழக்குகளும் உள்ளன. இவர்கள் இருவரும் சிறையில் இருந்தபோது இருவரில் யார் பெரியவன் என்கிற போட்டி ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பேரும் ஜாமீனில் வெளியே வந்ததும், வழக்கம்போல மது அருந்தும் இடத்தில் சிறையில் ஏற்பட்ட போட்டி குறித்து மற்றொரு நண்பன் சிவாவிடம் விவேக் கூறியிருக்கிறான். இதை பெரிதுபடுத்தாமல் அவனும் நம்ம நண்பன் தானே என்று விட்டு விட்டான். 

சில வாரங்களுக்கு முன்பு நந்தா நகரில் உள்ள வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தனர். யார் பெரிய ஆள் என்கிற போட்டி அங்கு ஏற்பட்டு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது சிவா ஆனந்த் உள்ளிட்டோர் அங்கிருந்து கட்டையாலும், சரமாரியாக கத்தியாலும் குத்தி கொலை செய்து புதைத்தோம்." என்று அதிர்ச்சி கரமாக கூறினர்.

இரண்ட பேரையும் போலீசார் அழைத்து சென்று உடல் புதைக்கப்பட்ட இடத்தை காட்ட செய்து, தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே கூராய்வு செய்து செய்தனர்.இந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img