வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். குக்கர் சின்னத்தை டிடிவி தின கரன் பெற முயன்ற நிலையில் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து பரிசு பெட்டி சின்னம் அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த பரிசு பெட்டி சின்னம் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன். ஜெயலலிதா அறிவித்த எந்த திட்டங்களையும் இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் நடைமுறைபடுத்தவில்லை .தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் குறித்த ஒரு பட்டியலை அனுப்பி தேர்வு செய்ய கூறினர்.
ஜெயலலிதா அறிவித்த தாய், சேய் நலப்பெட்டகம் நினைவாக பரிசு பெட்டி சின்னத்தை தேர்வு செய்தேன். தற்போது பழையகடைக்கு போகும் நிலையில் உள்ளவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். இப்போது அமமுகவின் பரிசு பெட்டி சின்னம் ட்ரெண்ட் ஆகி வருகிறது எனக்கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்