சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டம் கூடுகிறது. மக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்ப டுகிறது.
அதிமுக சார்பாக தற்போது முதல்வர் பழனிச்சாமி தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்காகவும் அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இன்னொரு புறம் திமுக தலைவர் ஸ்டாலின் பெரிய பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்தி அசத்தி வருகிறார். இந்த பிரச்சாரம் காரணமாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், முதல்வர் பழனிச்சாமிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கூடியது போல பெரிய கூட்டம் கூடவில்லை என்பதுதான். முதல்வர் செல்லும் பல இடங்களில் அவரை மக்கள் கவனிக்க கூடவில்லை. பெரிய அளவில் கூட்டம் எதுவும் யாரும் அவர் பேச்சை நின்று கேட்பதில்லை என்று கூறப்படுகிறது.
சேலத்தில் முதல்வர் செய்த இந்த பிரச்சாரம் பெரிய வைரலானது. யாருமே இல்லாத சாலையில் முதல்வர் இப்படி பிரச்சாரம் செய்தது அதிமுகவினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதேபோல் வேலூரில் முதல்வர் நடத்திய இந்த பிரச்சார புகைப்படங்கள் பெரிய ஹிட் அடித்தது. அட, என்ன இது முதல்வருக்கு இவ்வளவுதான் கூட்டம் கூடுமா என்று பெரிய விவாதம் எழுந்துள்ளது.
மிக முக்கியமாக தர்மபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்யும் போது அதை கவனிக்காமல் மாடியில் நின்ற இளைஞரின் புகைப்படம் பெரிய ஹிட் அடித்து ஆன்லைன் டிரெண்டாக மாறியுள்ளது.அதே சமயம் சில அதிமுக தொண்டர்கள் இதற்கு பதிலும் அளித்து இருக்கிறார்கள். அதன்படி, இது எல்லாம் பிரச்சாரம் முடிந்து வாகனம் புறப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். வாகனத்திற்கு வழி விடுவதற்காக அங்கு மக்கள் யாரும் இல்லை என்றும் கூட இதில் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்