கோயம்புத்தூர்:
நேற்று கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சமூக வலைத்தளத்தையும்,டெக்னாலஜியையும் அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் என்று குறிப்பிட வேண்டும்.
நேற்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார்.
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் நடத்திய முதல் கூட்டமே மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் டெக்னாலஜியை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். மெரினா போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தமிழிசை வீடியோ என்று வரிசையாக இணையத்தில் வைரலான வீடியோக்களை, பெரிய திரையில் கமல்ஹாசன் ஒளிபரப்பினார். மக்கள் இதை பார்த்து கரகோஷம் எழுப்பினார்கள். பொதுவாக வீடியோக்களை கட்சிகள் எதுவும் மேடையில் ஒளிபரப்பியது இல்லை. ஆனால் கமல்ஹாசன் அந்த வழக்கத்தை முறியடித்து இருக்கிறார்.
அதேபோல் சோஷியல் மீடியாவில் தினமும் நடக்கும் விஷயங்களை கமல்ஹாசன் கரைத்து குடித்து இருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். பாஜகவிற்கு எதிராக, திமுகவுக்கு எதிராக, அதிமுகவிற்கு எதிராக வைரலான எல்லா ஹேஷ்டேக்குகளையும் கமல்ஹாசன் நியாபகமாக குறிப்பிட்டு நேற்று பேசினார். கோ பேக் மோடி குறித்து அடிக்கடி கமல்ஹாசன் பேசினார்.
தேபோல் சினிமா பாணியிலும் கமல்ஹாசன் கொஞ்சம் பேசுகிறார் என்றுதான் கூற வேண்டும். உன்னைப்போல் ஒருவன் படத்தில் வருவதை போலவே கமல்ஹாசன் நேற்று தனது பேச்சை பல தேதிகளை குறிப்பிட்டு தொடங்கினார். இது எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிவிட்டுதான் தனது பேச்சை தொடங்கினார். சினிமா நடிப்பு அனுபவம் அவருக்கு பெரிய அளவில் உதவுகிறது என்றுதான் கூற வேண்டும்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்