செவ்வாய் 20, ஏப்ரல் 2021  
img
img

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!
சனி 23 மார்ச் 2019 18:15:30

img

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் ப.வேலுச்சாமியை ஆதரித்தும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும்  சௌந்திரபாண்டியனை ஆதரித்தும் செம்பட்டியில் உள்ள சந்தை திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமைதாங்கினார். ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், பகுத்தறிவாளருமான ப..கசிவகுருசாமி வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசும்போது, 1972ம் ஆண்டு முதல் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக இம்முறை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுத்தது தோல்வி பயத்தில்தான் என்றார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணன் ப.வேலுச்சாமி அவர்கள் 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.

அவரை அடுத்து பேசிய திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான அர.சக்கரபாணி பேசும்போது, 2016ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களை எதிர்த்து அதிமுக சார்பாக பண பலத்துடன் போட்டியிட்ட நத்தம் விசுவநாதன் ஆத்தூர் தொகுதியின் செல்லப்பிள்ளை அண்ணன் ஐ.பெரியசாமியின் மீது  தொகுதி மக்கள் வைத்திருந்த பாசத்தால்  அமோக வெற்றி பெற்றார். அதுபோல இன்று திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ப.வேலுச்சாமி அவர்கள் அமோக வெற்றி பெறுவார் என்று கூறினார்.

இறுதியாக பேசியாக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியோ... நடைபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டம் கூட்டமா? மாநாடா? என்ற அளவிற்கு மக்கள் நிறைந்துள்ளார்கள். காரணம் மோடியின் ஆட்சி மீது உள்ள வெறுப்பு தான் என்றார். இந்தியா முழுவதும் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான தேர்தல் இது என்றார். மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 

மக்களாட்சிக்காக மக்கள் நலனுக்காக காங்கிரஸ் பேரியக்க தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார். ஆனால் மோடியோ இந்தியாவின் நான்கு பணக்கார முதலைகளை காப்பாற்ற போராடி வருகிறார். புல்வாமா தாக்குதலின் போது மிக் ரக விமானங்களை அனுப்பியபோது நமது இராணுவவீரர் அபிநந்தன் எதிரிகளிடம் பிடிபட்டார். நான் கேட்பது பயன்படுத்த முடியாத மிக் ரக விமானத்தை அனுப்பியது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். ரபேல் விமான பேர ஊழலில் மோடி அவர்கள் சம்மந்தப்பட்டு இருப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

இதுபோல தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் முதற்கொண்டு அனைத்து அமைச்சர்களும் விசாரணை வளையத்தில் வருவது உறுதி. நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றும். உங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் உங்கள் வீட்டில் உள்ள முதியோர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ப.வேலுச்சாமி அவர்களின் சிறந்த வேட்பாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்றார். 

இக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத்தலைவர் எஸ்.அப்துல்கனிராஜா, மாநகர தலைவர் எம்.சொக்கலிங்கம், மதிமுகமாவட்ட செயலாளர் எம்.செல்வராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எ.பி.மணிகண்டன், திராவிடர் கழகத்தை சேர்ந்த இரா.வீரபாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வ.அன்பரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த இ.எ.அல்தாப்உசேன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் எம். ரஹமத்துல்லா, மனித நேய மக்கள் கட்சி சேர்ந்த பழனி எம்.ஐ.பாரூக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் பி.அருள், அகில இந்திய பார்வர்டு ப்ளாக் மாநில செயலாளர் எம்.பசும்பொன்ராஜா, பார்வர்டு பிளாக் எஸ்.டி. மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராமன், ஆதிதமிழர் பேரவை மாவட்;ட செயலாளர் பி.காளிராஜ், மனிதநேய ஜனநாயக  கட்சி மாவட்ட செயலாளர் எ.அப்துல்காதர் ஜெய்லானி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் எம்.ஆண்டிச்சாமி மற்றும் ஒட்டன்சத்திரம் நகரசெயலாளர் வெள்ளைச்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் ஆ.நாகராஜ், தண்டபாணி, மார்கிரேட் மேரி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன், திண்டுக்கல் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன், ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, மாவட்;ட தொண்டரணி துணைச் செயலாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், நகர கழக செயலாளர்கள் சின்னாளபட்டி தி.கோபி, சித்தையன்கோட்டை சக்திவேல், அய்யம்பாளையம் அய்யப்பன், கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், ஸ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடராஜன், நெல்லூர் மலைச்சாமி, அய்யம்பாளையம் ரமேஷ் மற்றும் தோழமை கட்சிகள், ஆதரவு இயக்க நிர்வாகிகள்,கழக செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.முருகேசன், ரெட்டியார்சத்திர வடக்கு ஒன்றிய செயலாளர் சு.மணி ஆகியோர் நன்றி உரை கூறினார்கள்!.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img