சேலத்தில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு நல்லாட்சி செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் 17-வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதிவரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர் பெயர்களை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில் ஆளும் அதிமுகவுடன் பாமக கட்சி கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது.
இந்த நாடாளமன்றத் தேர்தல் கூட்டணிக்கு முன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்துவந்தனர். ஆனால், தேர்தல் கூட்டணிக்குபின் இவர்கள் இருவருமே அதிமுகவையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் புகழ்ந்து பேசிவருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது பாமக தலைவர் ஜி.கே.மணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியுள்ளார். சேலத்தில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அசாத்தியமான துணிச்சல்மிக்க தலைவராக ஜெயலலிதா திகழ்ந்தார் என்று ராமதாஸ் என்னிடம் கூறி யுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி செய்து வருகிறார். அதே போல் சிறப்பான கூட்டணியையும் அவர் அமைத்துள்ளார் என்று அவர் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்