சென்னை:
"ரஜினி அங்கிள்... நீங்க எங்க இருக்கீங்க?" இப்படித்தான் தங்களுக்காக இன்னும் குரல் கொடுக்க வரவில்லையே என்று தமிழகத்தின் இளம் பெண்கள் எதிர்பார்த்துள்ளனர்! பொள்ளாச்சி சம்பவம் நடந்து மாநிலமே கொந்தளித்து கிடக்கிறது! பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல இருக்கிறது! ஒருசில காம கழிசடைகளால் இன்றைக்கு நல்ல பசங்களை கூட சந்தேகத்துடன் இளம்பெண்கள் பார்க்க வேண்டிய அவலம் வந்துவிட்டது.
ஆளுக்கொரு கட்சி போராட்டம் நடத்துகிறது.. மாணவர்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டார்கள்.. வீட்டில் இருக்கும் பெண்கள் கூட துடைப்பக்கட்டையை எடுத்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய துவங்கி விட்டனர். நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவுக்கு கமல் கேள்வி கேட்டுவிட்டார்! ஆனால் ரஜினி?!
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக ஏன் வாயை திறக்கவே இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுக்கும் பாஜகவுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது என்றுதான் தெரிகிறது. அப்படி இருந்தும் ஏன் கண்டனக் குரல் எழுப்பவில்லை என்றும், ஆளும் தரப்பு செய்து கொண்டிருப்பது எல்லாம் ரஜினிக்கு நியாயமாக தெரிகிறதா என்றும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.
அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும், ரஜினியும் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றவர்தானே.. எங்களுக்காக ஏன் ஆதரவு குரல் எழுப்பவில்லை என்று இளம்பெண்களே யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இன்றைய இளைஞர்கள் ரொம்பவும் ஷார்ப்-ஆக இருக்கிறார்கள். எதையும் ஆழமாக யோசிப்பவர்களாகவும் எல்லாவற்றையும் தீவிரமாக சிந்திப்பவர்க ளாகவும் உள்ளனர். அதனால் ஒவ்வொரு பிரபலங்களையும் உன்னிப்பாக கவனித்து வரவே செய்கின்றனர்.
தமிழகத்தில் எந்த அசம்பாவிதம், இயற்கை சீற்றம், மனித குல பாதிப்புகள் என எது நடந்தாலும் அதற்காக ரஜினி குரல் கொடுப்பது எப்போதுமே குறை வாகவே உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த பொள்ளாச்சி விஷயத்தில் அதி பயங்கரமான ரகசியங்களும், மிக முக்கியமான பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக தமிழக மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவாவது, அல்லது அவர்களை காப்பாற்றி வரும் ஒரு சிலருக்கு எதிராகவாவது ரஜினி குரல் கொடுக்கலாமே? இதற்கே குரல் கொடுக்கவில்லை என்றால், "தண்ணி பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொல்ல மட்டும் யாருக்கும் துளி உரிமையும் கிடையாது" என்பது மக்களின் தாழ்மையான கருத்தாக உள்ளது!
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்