கோவை:
துப்பாக்கி லைசென்ஸ் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு கோவை மாவட்ட கலெக்டரிடம், இளம் சகோதரிகள் இருவர், மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை சந்திப்பதற்கு வந்துள்ளோம் என்று இரு இளம்பெண்கள் அனுமதி கேட்டபோது, கலெக்டர் அலுவலகத்தில் அது யாருக்கும் வியப்பை அளிக்கவில்லை. ஆனால், திடீரென அவர்களின் பின்னால் வந்த நிருபர்கள் மற்றும், வீடியோ மேன்களின் படையை பார்த்ததும், ஏதோ ஒரு விபரீதம் நடக்கிறது என்பதை அங்கிருந்த ஊழியர்கள் புரிந்து கொண்டனர்.
ஏனெனில், அந்த இரு பெண்களும் கலெக்டரிடம் வழங்கிய கோரிக்கை மனு அந்த மாதிரியான முக்கியத்துவத்தை பெற்றிருந்தது. கோவையில், மேடை அலங்காரம் செய்து வருபவர் சாந்தகுமார். அவரது இரு மகள்கள், ஓவியா மற்றும் தமிழ் ஈழம்.
தமிழ் ஈழம், பிகாம் மூன்றாமாண்டும், ஓவியா ஒன்பதாம் வகுப்பும் படித்து வரும் மாணவிகள். இருவரும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: பொள்ளாச்சி வன்புணர்வு சம்பவம் 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பார்க்கும் போது, எங்களுக்கு அச்சமாக உள்ளது.
இத்தனை நாட்களாக காவல்துறை இதை கண்டுகொள்ளாமல், அல்லது கண்டுபிடிக்காமல் இருந்துள்ளது. எனவே எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. நாங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்கள் சுய பாதுகாப்புக்காக போலீசாரை நம்ப முடியாமல் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டுள்ள சம்பவம் தமிழகத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுவதை போல உள்ளது.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்