பொள்ளாச்சி,
பொள்ளாச்சி வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், புதிய செய்தியாக துணை சபாநாயகரின் மகன் பிரவீன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிவுள்ளன. இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் சம்பாதித்து வந்த நான்கு பேர் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், வழக்கு விரைவில் சிபிஐ-க்கு மாற்றப்படவுள்ளது.
சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளன. அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, திமுக தன் மீது அவதூறு பரப்புவதாக பொள்ளாச்சி ஜெயராமன், ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் நவீன்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான மோதல்கள் வலுத்து வரும் நிலையில், பொள்ளாச்சி ஜெயராமனின் இளைய மகன் பிரவீன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்த கும்பலுக்கு கடுமையான தண்ட னைகள் வழங்கப்பட வேண்டும் என குரல்கள் வலுத்து வரும் நிலையில், பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் வெளிநாடு சென்றுவிட்டதாக வந்துள்ள செய்தி, அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தினரிடமும் சிபிசிஐடி காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் பொள்ளாச்சி ஜெயராமன், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசி நான் தான் புகார் கொடுக்க வைத்தேன். அதன்படி குற்றவாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கனி மொழி, மு.க. ஸ்டாலின் அவருடைய மருமகன் சபரீசன் போன்றோர் பொய்ப் புகார் பரப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கச் சொன்னது ஒரு குற்றமா? என பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்புகிறார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்