img
img

பொள்ளாச்சி ஆபாச வீடியோக்களும் ஆளுங்கட்சிப் புள்ளிகளும்..!
செவ்வாய் 12 மார்ச் 2019 17:36:22

img

``பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த அரக்கர்கள் குறித்து வெளிவந்திருக்கும் தகவல்களும், அவர்களின் பின்னணி குறித்து எழுந்திருக்கும் சந்தேகங்களும் தேர்தல் பரபரப்பைத் தாண்டி தமிழர்களின் இதயங்களை நொறுக்கியிருக்கிறது. இந்த அசாதாரண சூழலில்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் `இதில் 100 சதவிகிதம் அரசியல் தொடர்பு இல்லை' என்று  அடித்துச் சொல்லி அதிரடி கிளப்பியிருக்கிறார் கோவை எஸ்.பி பாண்டியராஜன். எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறார் எஸ்.பி? பொள்ளாச்சி விவகாரத்தில் இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பது குறித்த ஓர் அலசல்... 

எப்படி அகப்பட்டது இந்த அரக்கக் கும்பல்?

கைதானது யார் யார்? 

இதுதொடர்பாக கடந்த 24ம்தேதி, பொள்ளாச்சி கிழக்குக் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 25-ம் தேதி, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூன்று பேரையும் பொள்ளாச்சி போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு, `இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அரசியல் தொடர்புகள் இருப்பதாகவும், உயிரே போனாலும் நான் அதைச் சொல்வேன்’ என்றும் வாட்ஸ் அப் மூலம் ஆடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். இதற்கிடையில், வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி புகார் கொடுத்த கல்லூரிப் பெண்ணின் அண்ணனை மிரட்டியது மற்றொரு கும்பல். இந்த வழக்கில், செந்தில், பொள்ளாச்சி 34வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் `பார்’ நாகராஜ், பாபு, ஆச்சிப்பட்டி வசந்தகுமார் ஆகிய நான்குபேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நால்வரில் `பார் நாகராஜ்’ என்பவரை  ரிமாண்ட் செய்ய முடியாது எனக்கூறி அப்போதே வெளியில் விட்டுவிட்டார் மாஜிஸ்திரேட்.  அது பெரும் சர்ச்சையானது. அ.தி.மு.க உறுப்பினரான பார் நாகராஜனின் பெயரை எஃப்.ஐ.ஆரில் சேர்க்காமல் நீதிமன்றத்தில் நிறுத்தியதால்தான் அவரை ரிமாண்ட் செய்ய முடியவில்லை என்று கூறப்பட்டது.

ஃப்.ஐ.ஆரில் பெயர் சேர்க்கப்படாத `பார் நாகராஜனை’ நீதிமன்றம் வரை கொண்டு சென்றதற்கான இரண்டு காரணங்கள் உலா வருகின்றன. அரசியல் தொடர்புகள் இருப்பதாக வெளியான தகவலைப் பூசி மெழுகுவதற்காகத்தான் பார் நாகராஜனைக் கடைசியாகக் கொண்டு சென்றார்கள் என்று ஒரு காரணமும் பார் நாகராஜன் அ.தி.மு.க உறுப்பினர் என்பதால் அவர் பெயரை முதலில் எஃப்.ஐ.ஆரில் சேர்க்காமல்விட்டு பின்பு சமாளித்தார்கள் என்று மறு காரணமும் சொல்லப்படுகிறது. (எது உண்மை என்பது இந்த விவகாரத்தில் எல்லாம் அறிந்த போலீஸுக்கே வெளிச்சம்!) இறுதியாக கடந்த 5-ம் தேதி, திருநாவுக்கரசை பொள்ளாச்சியில் வைத்து கைது செய்தது காவல்துறை. திருநாவுக்கரசின் கைது போலீஸின் முயற்சியால் நடக்கவில்லை. 24-ம் தேதியிலிருந்து தண்ணி காட்டிக்கொண்டிருந்த திருநாவுக்கரசை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. `நான் நாளைக்குப் பொள்ளாச்சி வருகிறேன்' என்று 4-ம் தேதி வீடியோ வெளியிட்டு தானாகவே வந்து சரணடைந்தார் திருநாவுக்கரசு. ஆனால், ஏதோ தாங்களாகவே தேடிப்பிடித்ததைப் போல பில்ட்-அப் கொடுத்துக் கொண்டது போலீஸ்.

20 பேர் கொண்ட கும்பல் ... அரசியல் தொடர்புகள்...

இந்தக் குளறுபடிகளுக்கு மத்தியில் இதில் அரசியல் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பொள்ளாச்சியில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்தக் கும்பலின் பின்புலம் குறித்து அறிந்தவர்கள் இதில் அ.தி.மு.க புள்ளியின் வாரிசுகளுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்தார்கள். திருநாவுக்கரசு வெளியிட்ட  வாட்ஸ்அப் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்த்தது. கல்லூரிப் பெண்கள் மட்டுமல்ல திருமணமான பெரிய இடத்து பெண்களும் இந்தக் கும்பலிடம் சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்கள் என்றும் இவர்களிடம் சிக்கிய பெண்கள் பலர் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்றும் வெடித்துக் கிளம்பிய தகவலால் ஒட்டுமொத்த பொள்ளாச்சியும் உறைந்துபோனது.

இந்த மோசமான குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கம். தி.மு.கவும், மாதர் சங்கமும் குற்றவாளிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி, பொள்ளாச்சி அ.தி.மு.க எம்-பி மகேந்திரன் கோவை எஸ்.பி பாண்டியராஜனைச் சந்தித்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனு கொடுத்துவிட்டு இதில் அ.தி.மு.கவுக்கு எந்தவகையிலும் தொடர்புகிடையாது.

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று ஊடகங்களின் முன்னால் வார்த்தைகளால்  வாள் வீசிச் சென்றார்’ அதுவும் சர்ச்சைக்குள்ளானது. ஆட்சியில் இருப்பவர்களே நடவடிக்கை எடுக்கச் சொல்லி  புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வருகிறார்களே... இது நாடகமாகத் தெரிகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்று வாதம் கிளம்பி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது இந்த விவகாரம்.

நான்கு வீடியோக்கள்… 100சதவிகிதம்... எப்படிச் சொல்கிறார் எஸ்.பி?

அ.தி.மு.க கூட்டணி நீங்கலாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள், திரைத்துறையினர் எனப் பலரும் இந்தப் பொள்ளாச்சி பயங்கரத்திற்கு எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கோவை எஸ்.பி.பாண்டியராஜன். அப்போது அவர் தெரிவித்த அழுத்தமற்ற மேலோட்டமான தகவல்கள் இந்த வழக்கில் போலீஸின் செயல்பாடு எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த பெண்ணின் தரப்பில் உள்ளவர்கள் மூலம்தான் 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், நான்கே வீடியோக்கள்தாம் இருந்ததாக எஸ்.பி சொல்கிறார். குற்றவாளிகளை ஏன் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தவில்லை என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, `அதற்கான அவசியம் ஏற்படவில்லை. தேவைப்பட்டால் விசாரணை நடத்துவோம்’ என்கிறார். 

அடுத்தடுத்து கேட்கப்படும் கேள்விகளுக்கும் தேவைப்பட்டால் விசாரணை நடத்துவோம் என்கிறார். அரசியல் தொடர்புகள் இருப்பதாக திருநாவுக்கரசு ஆடியோ வெளியிட்டாரே என்று கேட்கும்போது, குற்றவாளிகள் சொல்வதை நம்பக்கூடாது என்கிறார். கூடவே இதுகுறித்த தவறான தகவல் பரப்பு பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள அவர்,  இதில்  `100சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பு கிடையாது’ என்று அடித்துச் சொல்லியுள்ளார்.

இந்தப் புள்ளியில்தான் எஸ்.பி-யின் வாதத்தில் சந்தேகம் வலுக்கிறது. விசாரணையே இன்னும் முடிவ டையவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகள் போலீஸ் கஸ்டடியில் எடுத்துக்கூட விசாரிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் எந்த அடிப்படையில் 100 சதவிகித உத்தரவாதம் தருகிறார்? எஸ்.பி இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. இந்தக் குற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க-வுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார். விசாரணையை முழுமையாக முடிக்காமல் முதல்கட்ட விசாரணையை வைத்துக்கொண்டே போலீஸ் இப்படிச் சொல்வது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை.”

பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையைத் தாண்டி ஏதோவோர் உண்மை மறைக்கப்படுகிறது என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img