img
img

நாளையோட கடைசி.. 4 சீட்தான்.. வந்தா வாங்க வராட்டி போங்க.. தேமுதிகவுக்கு அதிமுக கெடு?
சனி 09 மார்ச் 2019 14:05:50

img

சென்னை:

"இதுக்கு மேல முடியாது.. நாளைக்குதான் கடைசி... வந்தா வாங்க.. வராட்டி போங்க" என்ற ரீதியில் கூட்டணி சமாச்சாரத்தில் தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்துள்ளதாம்! திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்தில் இறங்கி விட்டது.

கூட்டணிகளுக்கு 20 போக மிச்சமிருக்கும் 20 தொகுதிகளில் போட்டி என்றுகூட அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்து விட்டார்.ஆனால் அதிமுகவால் இன்னும் இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட போகிறோம் என்று பகிரங்கப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் தேமுதிகவின் இழுபறிதான்.. அதற்கு காரணம் பாஜகவின் சப்போர்ட்தான்!

"2, 3 எல்லாம் தர மாட்டோம், அன்று சொன்னபடி 4 சீட்டுகள் தருகிறோம், வாங்கி கொள்ளுங்கள், தேர்தல் தேதியோ இன்று நாளை அறிவித்து விடு வார்கள். அதனால் இன்று நாளைக்குள் சட்டுபுட்டுனு ஒருமுடிவை எடுக்க பாருங்க. நாளை ஒருநாள் தான் உங்களுக்கு டைம். அதற்கு மேல் எங்களால் காத்திருக்க முடியாது" என்று அதிமுக கிடுக்கிப்பிடி கண்டிஷன் போட்டுள்ளதாம்.

இப்படி கெடு வைத்துவிட்டதால் தேமுதிக மீண்டும் டென்ஷனில் விழுந்துள்ளது. அந்த கட்சியில் இன்னும் யாருமே நார்மலாகவில்லை. கொதிப்பு, ஆத்திரம், விரக்தி, சோகம், ஆற்றாமை, தவிப்பு என்று எல்லா உணர்வுகளும் கலந்து தவித்து வருகிறார்கள். இதில் இன்று கூடி என்ன முடிவு எடுப்பார்களோ தெரியாது.

ஒருவேளை தரப்போகும் 4 சீட் வாங்கி கொள்வதாக வைத்து கொண்டாலும் தேமுதிக சில சிக்கல்களை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும், முதல் பிரச்சனை, எந்த தொகுதிகள் அவை என்பதாக இருக்கும் என்பதுதான். இரண்டாவது பிரச்சனை "மேற்படி" விஷயங்களுக்கு ஒத்து வருவார்களா? என்பது. மூன்றாவது பிரச்சனை முரசு கிடைக்குமா? அல்லது இரட்டை இலையா? என்பது. 

நான்காவது பிரச்சனை, இவ்வளவு அமர்க்களங்களும் நடந்து அதிமுகவுக்கு மீண்டும் சென்றால் மரியாதை கிடைக்குமா? என்பது. ஐந்தாவது பிரச்சனை, வடமாவட்டங்களில் பாமகவின் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கும் என்பதுதான்!

இதையெல்லாம் ஒருநாளுக்குள் யோசித்து தேமுதிக முடிவு சொல்லுமா என தெரியாது. அதனால் தேமுதிக தன் நிலைப்பாட்டை அறிவிக்கிறதோ இல்லையோ அதிமுக நாளைக்கு தன் முடிவை சொல்லிவிட்டு அடுத்து வேலையை பார்க்க போய்விடும் என்று மட்டும் தெரிகிறது! ஒருநாள்தானே... பார்ப்போம் தேமுதிக எடுக்க போகும் அதிரடியை!!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img