img
img

மீண்டும் உடைகிறது தேமுதிக - கட்சி நிர்வாகிகள் பரபரப்பு
புதன் 06 மார்ச் 2019 17:52:11

img

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இணைந்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்று தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில், நேற்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டணி சம்மந்தமாக ஆலோசனை நடத்தப்படும் என அறிவித்துவிட்டு தேமுதிக, அதிமுகவுடன் கூட்டனி ஏற்படுத்தப்பட வேண்டியதை பற்றி கட்சியின் நிர்வாகிகள் சிலர் பேசினார்கள். அந்த கூட்டத்தில் ஏழு பேர் மட்டுமே பேசினார்கள். மாவட்டச் செயலாளர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்க வில்லை. 

இந்த பின்னணியில்தான் இன்று கட்சியினுடைய துணை செயலாளர் கேப்டனின் மைத்துனர் சுதீஸ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மட்டும், அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பேசி ஒரு வழியாக அதிமுக கூட்டணிதான் என முடிவு செய்துவிட்டார்கள். இதில் பாமகவை விட குறைவான தொகுதியை பெறுவதற்கும் ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் இதற்கு முன்பு எங்களிடம் பேசிய கேப்டனின் மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்த உத்தரவாதம் பாமகவை விட கூடுதலாக ஒரு தொகுதி பெற்றுதான் கூட்டணியை இணையப்போகிறோம் என கூறினார்கள். ஆனால், இப்போது குறைவான இடங்களை பெற்றதோடு தேமுதிக பலவினமாகிவிட்டது என்பதை எங்கள் கட்சியின் தலைமையே சொல்லாமல் சொல்லிவிட்டது. 

இந்த நிலையில், எங்கள் கட்சியின் தலைமைக்கு என்ன தேவையோ அதை அதிமுக மற்றும் பாஜகவிடம் பெற்றுவிட்டார்கள். ஆக, கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஒட்டுமொத்தமாக கேப்டனின் குடும்பத்திற்கு அடமானம் வைக்கப்பட்டுவிட்டது. இனிமேலும் கேப்டனின் புகழ்பாடிக்கொண்டு அந்த குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டும் எங்கள் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து இழக்க வேண்டுமா என பல மாவட்டச் செய லாளர்கள், மாநில நிர்வாகிகள் தமிழகம் முழுக்க தொலைபேசி வழியாக ஆதங்கத்தை பேசி வருகிறார்கள்.

குறிப்பிட்ட மூன்று நிர்வாகிகள் தலை மையில் அக்கட்சியிலுள்ள பல்வேறு நிர்வாகிகள் தனியாக பிரிந்துவந்து, தனி அணியாக அறிவிக்க உள்ளார்கள். ஆக, சென்ற சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந சந்திரக்குமார் தலைமையில் தேமுதிக உடைந்து எப்படி தனி அணியாக மாறியதோ அதேபோல் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிக மற்றுமொரு பிளவை சந்திக்க உள்ளது. அரசியலில் அடுத்தடுத்து பரபரப்புக ளில் தேமுதிக பேசும் பொருளாக மாறியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img