அதிமுக சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சர் பதவியிலும் இருந்துள்ளார் கிணத்துக்கடவு தாமோதரன். இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக செயல்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். பின்னர் இரு அணிகளும் சேர்ந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் கிணத்துக்கடவு தாமோதரன் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்தார். கோவை மாவட்ட நிர்வாகிகளில் முக்கிய நபராக திகழ்பவர் தாமோதரன். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவில் அவர் இணைந்ததால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் அவர் மூலம் அமமுகவில் இருந்து பலரை இழுக்க ஆலோசனை வழங்கியுள்ளார். ''இத்தனை நாட்களாக சின்னமும், கட்சியும் தங்களுக்குத்தான் வரும் என்று பேசிக்கொண்டிருந்த அமமுகவுக்கு நீதிமன்ற தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடுக்கு போனா லும் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும்.
ஆகையால் அங்கிருக்கும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து வருவதுதான் இப்போது உங்களுக்கு உள்ள முக்கி யப்பணி. இதனை செய்தாலே கட்சியில் உங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படும். அடுத்தடுத்து நிர்வாகிகள் வருகையை எதிர்ப்பார்க்கிறேன்'' என்று தாமோதரனிடம் கூறியுள்ளார். மீண்டும் கட்சியில் சேர்ந்த தாமோதரன், எடப்பாடி சொன்ன அசைன்மெண்ட்டை முடிக்க சுறுசுறுப்பாக இயங்கி வருகிறாராம்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்