img
img

அரசியல் செய்யாமல் சொல்லுங்கள்.. விமானப்படை தாக்குதலில் ஒருவராவது கொல்லப்பட்டாரா? காங்கிரஸ் கேள்வி!
திங்கள் 04 மார்ச் 2019 13:31:32

img

டெல்லி:

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பெரிய விவாதமாக உருவெடுத்து இருக்கிறது.கடந்த வாரம் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பாலக்கோடு உட்பட நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 3 அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் பலியானார்கள் என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறி உள்ளது.முதலில் வெளியான தகவலின்படி இந்த தாக்குதலில் 300 - 400 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்க லாம் என்று கூறப்பட்டது. அதன்பின் நேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இந்த தாக்குதலில் 250 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறினார். ஆனால் பாகிஸ்தான் அரசு இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியது. இதுகுறித்து காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி கபில் சிபல் எழுப்பியுள்ள கேள்வியில், நியூயார்க் டைம்ஸ், லண்டனின் ஜேன் இன்பர்மேஷன் குரூப், வாஷிங்டன் போஸ்ட், டெய்லி டெலிகிராப், தி கார்டியன், ராய்ட்டர்ஸ் என்று வெளிநாட்டு ஊடகங்கள் யாருமே பாகிஸ்தானில் யாருமே சாகவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் ஏன் மாற்றி கூறுகிறீர்கள், இந்த தாக்குதலை ஏன் அரசியலாக்க பார்க்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ''விமானப்படை மேஜர் ஆர்ஜிகே கபூர் கூறுகையில், இப்போதைக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று சொல்ல முடியாது. பலி எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடி யாது, என்கிறார். ஆனால் அமித் ஷா 250 பேர் பலியாகிவிட்டதாக கூறுகிறார். இந்த விமான தாக்குதலை வைத்து அமித் ஷா அரசியல் செய்கிறார்'' என்று மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ''விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு?, என்று கேட்டு இருக்கிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img