டெல்லி:
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதட்டத்தை தொடர்ந்து இந்திய விமானப்படை தளபதி மற்றும் கடற்படைத் தளபதிக்கு இசட் பிளஸ் பாது காப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. எல்லை தாண்டி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் நுழைய முயன்றன. ஆனால், இந்திய விமானப்படையினர் அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர்.
தற்போது, விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கபட்ட பிறகும், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எஸ். டானோயா மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா ஆகியோருக்கு பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்