விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமனுக்காக இந்தியாவே கவலைகொண்டுள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த 12 நாள்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம்கள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்தியப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தான் ஊடகங்களில் இந்திய வீரர் ஒருவரை பாக். ராணுவம் பிடித்துவைத்துள்ளதாகச் செய்தி வெளி யானது. இதற்கு, இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கடுத்து, பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பிடித்து வைத்துள்ளதாக ஒரு வீடியோ வெளியிட்டனர். அவர், ஏர் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமன் என்று தெரிவித்தது.
அபிநந்தன் வர்த்தமன் பிடிபட்டதும், நமக்கு கார்கில் நினைவுகள் மீண்டும் வருகின்றன. கார்கில் போரின்போது இந்திய விமானப்படை விமானி நச்சி கேட்டா பாகிஸ்தான் வீரர்களால் பிடித்துச்செல்லப்பட்டார். சிறிது காலம் அங்கு சிறைவாசம் அனுபவித்தவர், பின்னர் விடுவிக்கப்பட்டார். கார்கில் போரின்போது அவரது விமானத்தில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக, விமானத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் கார ணமாகவே அவர் பிடிபட்டார். கார்கில் போரில் பிடிபட்ட ஒரே இந்திய வீரர் இவர் தான்.
1999-ம் ஆண்டு கார்கில் போரின்போது, நச்சிகேட்டாவுக்கு 25வயது. மிக் ரக விமானத்தில் பாகிஸ்தான் மீது குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தார். அப்போது, அவரது விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் அதில் இருந்து வெளியேறியுள்ளார். சூழ்நிலையை அறிந்துகொண்ட நச்சிகேட்டா, தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதில் இருந்த குண்டுகள் தீர்ந்துவிடவே, பாகிஸ்தானிடம் பிடிபட்டார்.
பாகிஸ்தானில் இருந்த நாள்களையும் அந்தச் சூழலையும் நச்சிகேட்டா கடந்த 2016-ல் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் வீரர்க ளிடம் நான் சிக்கியது மோசமான தருணம் .அவர்கள் என்னை கொலைகூட செய்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பகுதியில் தாக்கு தல் நடத்திய எதிரி நாட்டு வீரன். அவ்வளவே. என் நேரம், அங்கிருந்த உயர் அதிகாரி மிகவும் முதிர்ச்சியாக நடந்துகொண்டார். அந்தச் சுழலைப் புரிந்து கொண்டார். நான் இப்போது அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டேன். வீரர்களை அவர் சமாதானப்படுத்தினார். அங்கிருந்த சூழலை வார்த்தைகளால் விவ ரிக்க முடியாது. அந்த நேரத்தில் மரணம்தான் எனக்கு முன்பு இருந்த எளிமையான வழியாகத் தெரிந்தது. 3- 4 நாள்கள் மனத்தளவிலும், உடல் அளவி லும் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளானேன்''எனக் கூறியிருந்தார்.
இந்தியா தரப்பில் இருந்து சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே, பாகிஸ்தான் அவரை விடுவிக்க ஒப்புக்கொண்டது. 8 நாள்களுக்குப் பின்னர், அவர் ரெட் க்ராஸ் அமைப்பிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். வாகா பார்டர் வழியாக இந்தியா அழைத்துவரப்பட்டார். தற்போது, இந்திய விமாப்படையில் க்ரூப் கேப்டனாகப் பணிபுரிந்துவருகிறார். கார்கில் அனுபவங்கள் தனக்கு வாழ்க்கையின் மதிப்பை புரியவைத்தது என்றார்.
ஜெனீவா ஒப்பந்தத்தின்படி,'சிறைபிடிக்கப்படும் வீரர்களையோ அல்லது சரணடையும் வீரர்களையோ காயப்படுத்தக் கூடாது. காயமடைந்த வீரர்களுக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோன்று, சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை கொல்லக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசாரணையின்றி அவர்களுக்கு தண்டனையும் வழங்கக் கூடாது. அதேபோல், 7 நாள்களுக்குள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்' என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 196 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
கார்கில் போரில் கைதுசெய்யப்பட்ட நச்சிகேட்டா, 8 நாள்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். நச்சிகேட்டவை மீட்டதுபோன்று, உலக நாடுகளின் உதவியோடு அபிநந்தனையும் மீட்க முடியும் என்று கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்